நிபந்தனையுடன் 19 தமிழக மீனவர்கள் விடுதலை


எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க அந்நாட்டு ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 19 பேரையும் நிபந்தனையுடன் விடுவிக்க அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும், இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

x