[X] Close

அறிவியல் மேஜிக்: நெருப்பு சுடாத பலூன்!


  • kamadenu
  • Posted: 01 May, 2019 11:29 am
  • அ+ அ-

அதிமுக தேர்தல் அறிக்கையில் நிறை வேற்ற முடியாத வாக்குறுதிகளை வெளியிட்டதற்காக அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.

தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அமாவாசை, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஏப்.18-ல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் முடிந்து பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக ஒருங்கி ணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், கடந்த பிப்.19-ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது விதிகளுக்கு முரணானது. நடைமுறைப்படுத்த முடி யாதது. தமிழக அரசுக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் உள்ளது. நிதி நிலை நெருக்கடியால் மாணவர்களுக்கான உத வித் தொகை வழங்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது ஓட்டுக்காக மக்க ளை ஏமாற்றுவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி நடைமுறைக்குச் சாத்தியமற்ற உறுதி மொழிகளை அளிக்க முடியாது. இது நன்கு தெரிந்திருந்தும் இத்திட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது.

இதனால் தேர்தல் நடத்தை விதி களை மீறி நிறைவேற்ற முடியாத வாக்குறுதி அளித்ததற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close