[X] Close

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர் மாயம், கார் எரிப்பு வங்கியில்; பல லட்ச ரூபாய் மதிப்பில் நகைகள் மோசடி?- நகை, ஆவணங்களை சரிபார்க்கும் அலுவலர்கள்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 09:38 am
  • அ+ அ-

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் இன்று முதல் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் மெட்ரோ ரயில்கள் தற்போது காலை 8 முதல் இரவு 10 வரை இயக்கப்பட்டு வருகிறது. இதன் இயக்க நேரம் இன்று முதல் அதிகாலை 4.30 முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம், சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு முதல் ரயில் சேவை தொடங்கும். கடைசி ரயில் மேற்கூறிய ரயில் நிலையங்களில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். அதிகாலை 4.30 முதல் காலை 6 மணி வரை மற்றும் இரவு 10 முதல் 11 மணி வரை 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

காலை 8 முதல் 11, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், பிற நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட சேவை, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல, காலை 8 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close