[X] Close

தீன்தயாள் உபாத்யாயா திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: மின்வாரிய தலைவர் அறிவுறுத்தல்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 07:42 am
  • அ+ அ-

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுக பிரச்சாரம்தென்சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெ.ஜெயவர்தன் கொட்டிவாக்கம் பகுதியில் நேற்று வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக நிர்வாகிகள் உடன் சென்றனர். திருவான்மியூர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயவர்தனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் மாலையில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது ஜெ.ஜெயவர்தன் பேசுகையில், “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறி வருகிறார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அதேபோல், பெருங்குடி குப்பைக் கிடங்கை மேம்படுத்தவும், கழிவுகள் கலப்பதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார்” என்றார்.

திமுக உறுதி

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர், நீலாங்கரை, அடையாறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

பிரச்சாரத்தின்போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “எங்கள் கூட்டணிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

அமமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா, சைதாப்பேட்டையில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது இசக்கி சுப்பையா பேசுகையில், “சின்னம் இல்லாமல் பிரச்சாரம் செய்து வந்தோம். தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது. இந்த சின்னத்தை மக்கள் கொடுத்த பரிசாக நினைக்கிறோம். எங்களுடைய சின்னம் மக்களிடம் எளிதாகச் சென்று சேர்ந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்த தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close