[X] Close

திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநரை தாக்கி கொள்ளை முயற்சி


  • kamadenu
  • Posted: 02 May, 2019 07:44 am
  • அ+ அ-

தேர்தல் பிரச்சாரத்தின் போது கோடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட அவதூறு வழக்கில், இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் பெற அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு மு.க.ஸ்டாலின் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளளது. இந்நிலையில் இந்த தடையை நீக்கக்கோரியும், இதுதொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் கோடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசி வருவதாகவும், எனவே அதற்கு தடை விதிக்கக்கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, கோடநாடு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வரை தொடர்புபடுத்தி பேசியதற்காக ஏற்கெனவே சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி,‘இதுதொடர்பான வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருக்கும்போது அந்த விவகாரம் தொடர்பாக ஏன் பேச வேண்டும்’ என மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் இது தொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என கோரினார். அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், அப்படியென்றால் அதுவரை கோடநாடு சம்பவம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் எதுவும் பேசக்கூடாது என உத்தரவிட வேண்டும், என்றார்.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.3-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close