[X] Close

குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக அல்ல: சூலூர் தொகுதி பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:05 am
  • அ+ அ-

சேலம் மாவட்ட ஆட்சியரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது;

தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.54 கோடியே 43 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ரூ.19 கோடி திருப்பிவழங்கப்பட்டுள்ளது. சென்னையில், வருமானவரித் துறையின் ஆய்வில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து கிடைத்த ரூ.15 கோடியே 17 லட்சம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், ரூ.72 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 261 கிலோ தங்கம், ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்புள்ள 346 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் என மொத்தம் ரூ.74 கோடியே 47 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவைதவிர, ரூ.77 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ரூ.77 லட்சம் மதிப்புள்ள புடவை மற்றும் துணி வகைகள், ரூ.11 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள 14 மடிக்கணினிகள், ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள குக்கர் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிவிஜில் கைபேசி செயலி மூலம்1,251 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 446 புகார்கள் சரியானவைஎன்று கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரியான தகவல் இல்லாததால் 414 புகார்கள் கைவிடப்பட்டுள்ளன. 31 புகார்கள் தற்போது நிலுவையில் உள்ளன.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக இதுவரை 768 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் நேற்று (28-ம் தேதி) மட்டும் 66 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 36 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

தூத்துக்குடியில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளதா?

பணம் கொடுத்தது தொடர்பாகவெளியான வீடியோ அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. அந்த வீடியோ ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5 பேர் அடையாளம் தெரியவில்லை. விரிவாக ஆய்வுசெய்யப்பட்டு தவறு நடந்திருந்தால், அந்த எஃப்ஐஆர்மீது குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்வார்கள்.

சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சிலரை மாற்றக் கோரி திமுக மனு அளித்துள்ளதே?

இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். தேர்தல் ஆணையத்திடமும் தெரிவிப்போம்.

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து அதிமுக அளித்த புகார் மீதான நடவடிக்கை?

அவர் பேசிய தொகுதியின் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க 48 மணி நேரம் அவகாசம் உள்ளது.

மின்னணு இயந்திரங்களில் சின்னம், பெயர் பதிக்கும் பணி எப்போது முடிவடையும்?

சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், வரும் ஏப்ரல் 10 முதல் 13-ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close