[X] Close

பெங்களூரு பிரச்சாரக் கூட்டத்தில் தவறாகத் தீண்டிய நபரை அறைந்த குஷ்பு: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 06:58 am
  • அ+ அ-

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் விரைவில் நீட்டிக்கப்படும். அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள் ளது. இருப்பினும், மெட்ரோ ரயில் களில் பயணிகளின் எண்ணிக் கையை அதிகரிக்க பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடி யிருப்பு பகுதிகள், தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி வசதி விரிவாக்கம் செய்யப் படுகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில் சேவையை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நீட்டிக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சென்ட்ரலில் விரைவு ரயில்கள் மற்றும் விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படும் நேரத்தை கணக்கில் கொண்டு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ரயில் சேவை நேரம் விரைவில் நீட்டிக்கப்படும். அதற் காக சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பயணிகளின் கோரிக் கையை ஏற்று, சென்னை சென்ட் ரல் - கோயம்பேடு - விமானநிலை யம், வண்ணாரப்பேட்டை - சென்ட் ரல் - அண்ணாசாலை வழியாக பரங்கிமலைக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் நீடிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படும்.

தற்போது மெட்ரோ ரயில்கள் காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. ரயில் சேவை நேரம் நீட்டிப்பின்படி இனி ரயில்கள் காலை 4-30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 4-30 மணி முதல் 6 மணி வரையில் கூடுதலாக 3 ரயில்சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை கூடுதலாக 4 ரயில்சேவையும் இயக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கமான அட்டவணைப் படி ரயில்கள் இயக்கப்படும்.

ரயில் சேவை நேரம் நீட்டிப்புக் கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டம் நிறைவடைந்த பிறகு புதிய கால அட்டவணை தயார் செய்து இறுதி முடிவை அறிவிப்போம்” என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close