[X] Close

ஜெ. மரணம் பற்றி பேச திமுகவுக்கு உரிமையில்லை: தமிழிசை


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 11:36 am
  • அ+ அ-

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி பேச திமுகவுக்கு என்ன உரிமை இருக்கிறது? என தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, திண்டுக்கல்லில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் விசாரிப்பது ஜெயலலிதா மரணம் குறித்தே, இதுவே என் முதல் வேலை" எனக் கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள தமிழிசை, "திமுக ஆட்சியில் சட்டமன்ற வளாகத்துக்குள்ளேயே ஜெ.வை பெண் என்றும் பாராமல் அடித்து உதைத்து மான பங்கம் செய்த திமுகவிற்கு அவர் மரணம் பற்றி பேச என்ன உரிமை?" என பதிவிட்டுள்ளார்.

மேலும், சாதிக்பாட்சா கொலை? அண்ணாநகர் ரமேஷ் மரணம்? விசாரித்தபின்னர்?? ஜெ. மரணம் பற்றி விசாரிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

சாதிக் பாட்சா என்பவர் 2ஜி வழக்கில் விசாரணை வளையத்தில் இருந்தவர். இவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அது தற்கொலை என சொல்லப்பட்டாலும்கூட இதில் திமுகவின் சதி இருப்பதாக அப்போது முதலே பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதனை சுட்டிக் காட்டியே ஜெ. மரணத்தை விசாரிப்பதற்கு முன்னதாக சாதிக் பாட்சா மரணத்தை ஸ்டாலின் விசாரிக்கட்டும் என தமிழிசை கூறியிருக்கிறார்.

மக்களவை தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தமிழிசையை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close