[X] Close

எத்திலின் வாயு மூலம் மாம்பழத்தை பழுக்க வைக்கலாம்; ரசாயன கல் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 08:09 am
  • அ+ அ-

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்பு மனுவை ஏற்க தேர்தல் நடத்தும் அலுவலர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மக்கள்நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அருள் பிரகாசம் என்பவரை அக்கட்சி மேலிடம் அண்மையில் அறிவித்தது. சென்னையில் வர்த்தகம் செய்யும் அவரை பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவித்ததற்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நேற்று முன் தினம் இரவு 11.30 மணிக்கு அருள் பிரகாசம் மாற்றப்பட்டு செந்தில்குமார்(44) என்பவர் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று மதியம் 2.58 மணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்கு முன்பே சில சுயேச்சை வேட்பாளர்கள் பதிவு செய்துவிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு காத்திருந்தனர். எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியினரை தேர்தல் நடத்தும் அலுவலரின் தனிச் செயலர் அறையில் காத்திருக்கச் செய்தனர்.

உயர் அதிகாரி உத்தரவு

இந்நிலையில், சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு வேட்பாளர் செந்தில்குமார் மதியம் 3.20-க்கு ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவரை உள்ளே அனுமதிக்க போலீஸார் மறுத்தனர். கடும் வாக்குவாதத்துக்குப் பின்னர் உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் வேட்பாளர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், அக்கட்சியினரும் பதற்றத்துடன் வெளியே வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரான வே.சாந்தா, வேட்பு மனுவை ஏற்க மறுத்துவிட்டார் என அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவரமறிய மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வே.சாந்தாவை செய்தியாளர்கள் தொடர்புகொள்ள முயன்றபோது, மக்கள்நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் வேட்பு மனுவுடன் சமர்ப் பிக்க வேண்டிய ஆவணங்கள், போதிய விவரங்களைச் சமர்ப்பிக்காததால் மனு ஏற்கப்படவில்லை’’ என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசுக்கு கெட்ட பெயர்

‘‘பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சத்துணவுத் திட்டத்தில் நடைபெற்ற முட்டை முறைகேடு பிரச்சினையை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அம்பலப்படுத்தினர். இதனால் அப்போது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சாந்தா எங்களதுவேட்பு மனுவை நிராகரித்திருப் பாரோ? என சந்தேகம் உள்ளது. எங்கள் வேட்பு மனுவைப் பார்க்காமலேயே போதிய விவரங்கள் இல்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் எப்படிச் சொல்கிறார் என புரியவில்லை. கட்சியின் மாநில தலைமையிடம் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்’’ என்று செந்தில்குமார் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close