[X] Close

தமிழகத்துக்கு பிரச்சினைகளை கொண்டு வந்தது திமுகதான்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 08:01 am
  • அ+ அ-

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் 5 நாட்கள் தொடர் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

அதிமுக கூட்டணி இறுதியாகி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேனி சென்ற துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மறுநாள் முதலே தேனி மக்களவை தொகுதியின் வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து சோழவந்தான் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

2 நாட்கள் தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் கடந்த 23-ம் தேதி சென்னை வந்த அவர், தொடர்ந்து 24, 25 தேதிகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், தனது அடுத்தகட்ட பிரச்சாரத்தை அவர் இன்றுதொடங்குகிறார். கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து இன்று வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, விழுப்புரம் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் கே.நாராயணசாமி, நெடுஞ்செழியன் (தட்டாஞ்சாவடி) ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

அதன்பின் மாலையில் கடலூரில் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி, சிதம்பரம் அதிமுக வேட்பாளர் பி.சந்திரசேகர் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாளை (28-ம் தேதி) மயிலாடுதுறை – எஸ்.ஆசைமணி (அதிமுக),நாகை – தாழை ம.சரவணன்(அதிமுக), தஞ்சை- என்.ஆர்.நடராஜன்(தமாகா) மற்றும் தஞ்சை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் ஆர்.காந்தி (அதிமுக), திருச்சி - வி.இளங்கோவன் (தேமுதிக) ஆகியோரை ஆதரித்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, 29-ம்தேதி, கரூர்- மு.தம்பிதுரை (அதிமுக), பெரம்பலூர்- என்.ஆர்.சிவபதி (அதிமுக), நாமக்கல் - பி.காளியப்பன் (அதிமுக), சேலம் - கே.ஆர்.எஸ்.சரவணன் (அதிமுக) ஆகியோரை ஆதரித்தும், 30-ம்தேதி தருமபுரி- அன்புமணி (பாமக), அரூர் சட்டப்பேரவை - வி.சம்பத்குமார் (அதிமுக), கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி (அதிமுக), ஒசூர் சட்டப்பேரவை - ஜோதி (அதிமுக) ஆகியோரை ஆதரித்தும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலூரில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close