[X] Close

இலவச அரிசிக்கு கிரண் பேடி விதிக்கும் கெடுபிடி: குவியும் விமர்சனங்கள்


kiran-bedi-on-distribution-of-free-rice

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Apr, 2018 14:24 pm
  • அ+ அ-

தூய்மை சான்றிதழ் இருந்தால்தான் இலவச அரிசி என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி விதித்திருக்கும் கெடுபிடி சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

"திறந்த வெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தாமலும் குப்பைகளைத் தூக்கியெறியாமலும் இருக்கும் கிராமங்கள் என கம்யூன் ஆணையர்களும் தொகுதி எம்எல்ஏக்களும் சான்றிதழ் அளித்தால்தான் இலவச அரசி விநியோகம் செய்யப்படும். 
இலவச அரிசி, மக்கள் தொகையின் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு சென்று சேர்கிறது. இன்று காலையில் ரவுண்டுக்குச் சென்றபோது எனக்குக் கிடைத்த பாடம் இதுதான்" என கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தூய்மைப் பணிகள் முடிவடைந்து சான்றிதழ் பெறும் வரை அந்த கிராமத்திற்கான இலவச அரிசி சேமிக்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதற்கு, சமூகவலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். சிலர், ஆளுநரின் முடிவு வரவேற்கத்தக்கது என சிலர் தெரிவித்திருக்கின்றனர்.
புதுவை துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இருப்பினும், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கு கிரண் பேடி விதித்துள்ள இந்த கெடுபிடி விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close