[X] Close

இறையாண்மையை காக்க மீண்டும் மோடி: எச்.ராஜா விருப்பம்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 10:03 am
  • அ+ அ-

சிவகங்கை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த திருப்பத்தூரில் அதிமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பேசியதாவது:

இத்தேர்தல் அரசியல் போட்டி அல்ல. ஒரு தர்மயுத்தம். ஒரு பக்கம் மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தரும் பாஜக, அதிமுக ஆகிய நல்ல சக்திகளுக்கும், மறுபுறம் ஆட்சியில் தவறாக சம்பாதித்ததை வெளிநாடுகளில் கொண்டு சேர்த்த திமுக, காங்கிரஸ் ஆகிய தீய சக்திகளுக்குமானது.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும். முதல்வர் ஆகிவிடலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு அதிமுக அமைத்துள்ள பிரம்மாண்டக் கூட்டணி மரண அடி கொடுத்துள்ளது.

தேசிய சிந்தனை கொண்டவர்களின் இயல்பான கூட்டணி எங்கள் கூட்டணி. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாகச் செயல்பட்டதால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைத் தொடரும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close