[X] Close

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 11:40 am
  • அ+ அ-

தேனி மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் குடும்பத்தினர் பணத்தை தண்ணீராக வாரி இறைக்கின்றனர் என தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.

தேனிக்கு நேற்று காலை வந்த தங்க தமிழ்செல்வனுக்கு அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக தேனி மாவட்ட எல்லையான கணவாய் மலைப் பகுதியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மக்கள் தாமாகவே முன்வந்து எங்களை வரவேற்கின்றனர். இதற்குக் காரணம் அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் ஏற்காததுதான். அரசியலில் புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தொகு திக்குத் தேவையான திட்டங் களைச் செயல்படுத்த வேண்டிய ஓ.பன்னீர்செல்வம் தேனி, ஆண்டி பட்டியைப் புறக்கணித்துள்ளார் என்றார்.

முன்னதாக, மதுரையில் தங்கதமிழ்ச்செல்வன் செய்தி யாளர்களிடம் கூறியது: இந்தியாவில் பாஜகவை தவிர்த்த மாற்று அரசு அமைய வேண்டும், தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய மக்களவைத் தேர்தலின் நிலை. தேர்தலில் ஓபிஎஸ்ஸுக்கும், அவரது மகனுக்கும் தொகுதி மக்கள் பாடம் புகட்டுவர். ஓபிஎஸ் குடும்பத்தினர் பணத்தை தண்ணீராக வாரி இறைக்கின்றனர். அதிகாரிகள் சிலரும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் இதைத் தடுக்க வேண்டும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close