[X] Close

திமுக கூட்டணியை கண்டு பிரதமர் மோடிக்கு அச்சம்: திருமாவளவன் கருத்து


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 08:56 am
  • அ+ அ-

திமுக கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம்(தனி) தொகுதியில் போட்டியிடும் அவர், அரியலூ ரில் நேற்று முக்கியப் பிரமுகர் களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் அவர், செய்தியா ளர்களிடம் கூறியது:

கோடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது, தேர்தல் நேரத்தில், இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது. உண்மை எது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதேபோல, தமிழகத்தில் அமைந்துள்ள திமுக கூட்டணி யைக் கண்டு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார். மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பது இதன் மூலம் புரிந்து கொள்கிறேன்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close