[X] Close

குமரியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி- தலைவர்கள் முற்றுகையால் சூடுபிடிக்கும் தேர்தல் களம்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 07:56 am
  • அ+ அ-

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். அவர் உறுதியளித்தபடி மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தை செலுத்தவில்லை. திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன அறிவித்து மக்களை வெயிலில் காக்க வைத்து அவதிப்படச் செய்ததால் 150 பேர் வரை உயிரிழந்தனர்.

உலகம் சுற்றும் வாலிபர்தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு நிதி கேட்டதற்கு 10 சதவீத நிதிகூட வழங்கவில்லை. ஆனால் குஜராத்தில் படேல் சிலைக்குரூ.3 ஆயிரம் கோடி செலவிட்டார்.

பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபர். 45 நாடுகளுக்கு 55 முறை சென்றுள்ளார். இதற்கான விமான பயணத்துக்கு ரூ.2,500 கோடி செலவாகியுள்ளது.

நீட் தேர்வை கொண்டுவந்து, மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தனர். ராகுல் காந்தி பிரதமர் ஆனதும், நீட் தேர்வு ரத்துதான் முதல் கையெழுத்து. விவசாயம், கல்விக்கடன் தள்ளுபடியாகும். தேர்தல் அறிக்கைதான் திமுக கூட்டணியின் கதாநாயகன்.

நடிகர் விஜயகாந்த் மீது மரியாதை உள்ளது. ஆனால், அவருக்கு ஒன்றும் தெரியாது, அவரை வைத்து ஆதாயம் தேடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கிண்டல் பேச்சு.. துண்டுச் சீட்டு

செல்லும் இடங்களில் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தபடியே, ‘‘என்னை யார்னு தெரியுதா?’’ என்று கேட்கும் உதயநிதி, ‘‘நான்தான் கலைஞரின் பேரன்.. ஸ்டாலினின் மகன்..’’ என்று அறிமுகம் செய்துகொண்டு, பேச்சைத் தொடங்குகிறார்.

துண்டுச் சீட்டில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது அதை பார்த்து, எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசுகிறார். குறிப்பை பார்த்து பேசினாலும், அதை நகைச்சுவையோடும், கிண்டலாகவும் எடுத்துரைப்பதால் கூட்டத்தினர் கைதட்டி, ரசித்துக் கேட்கின்றனர்.

பேச்சின் நடுவே, ‘‘செய்வீர்களா..?’’, ‘‘ஓட்டு போடுவீர்களா?’’ என்று ஜெயலலிதா பாணியில் அவர் கேட்பதும் தொண்டர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close