[X] Close

மாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 07:02 am
  • அ+ அ-

லோக்பால் அமைப்பின் முதல் தலை வராக நீதிபதி பினாகி சந்திரகோஷ் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

ஊழலைக் கண்காணிக்க மத்தியில் லோக்பால் அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற் றும் மத்திய அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் வகையில் லோக்பால் சட்டம் இயற்றப் பட்டது. ஆனால், சட்டம் இயற்றப் பட்ட பின்னரும் லோக்பால் அமைக்கப் படுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

மேலும் லோக்பாலை நியமிப்பதற் கான ஆலோசனைக் குழுவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள விடுக்கப்பட்ட மத்திய அரசின் அழைப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே 7 முறை நிராகரித்தார்.

இந்நிலையில் லோக்பால் அமைப் பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார்.

மேலும் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களாக திலீப் போசலே, பிரதீப் மொஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய் திரிபாதி, தினேஷ் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், இந்திரஜித் கவுதம் ஆகியோர் நியமிக் கப்பட்டனர். இந்நிலையில் நேற்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற் றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

66 வயதாகும் பினாகி சந்திரகோஷ், 2017-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி யிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தின் உறுப்பினராகவும் பணியாற்றி னார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் பல முக்கிய தீர்ப்புகளை இவர் வழங்கியுள்ளார்.

லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் 5 ஆண்டு கள் அல்லது அவர்களது 70-வது வயது வரை பதவியில் நீடிக்கலாம்.

தேடல் குழு

2013-ம் ஆண்டே மசோதா நிறை வேற்றப்பட்டிருந்தாலும், லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப் பினர்களை நியமிப்பது தொடர்பாக தேடல் குழு ஒன்றை ஏற்படுத்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய் தது. அதன்படி, நீதிபதி ரஞ்சனா குமார் தலைமையிலான 8 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டு லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய பொறுப்புகள்

லோக்பால், லோக் ஆயுக்தாவின் முக்கிய பொறுப்புகள் வருமாறு:l தலைவர் மற்றும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்களைக் கொண்டது லோக் பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதி பேர் நீதித்துறையைச் சார்ந்தவர் களாக இருப்பர்.

l லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளி ராக இருக்க வேண்டும்.

l லோக்பால் விசாரணை வரம்புக் குள் பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரு வார்கள்.

l விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.

l ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத் துக்கு மேல் வெளிநாட்டில் உள்ளவர் கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படுவர்.

l லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ உள்ளிட்ட புல னாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது.

l மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிக்கப்படுவர்.

l லோக்பால் பரிந்துரைக்கும் வழக்கு களை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம் செய்யப்படுவர்.

l ஊழல் வழியில் சேர்த்த சொத் துக்களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறைகள் உள்ளடங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close