[X] Close

அரிய தமிழ் நூல்களைப் படிக்க 'சங்க இலக்கியம்' செல்போன் செயலி அறிமுகம்: பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 08:40 am
  • அ+ அ-

பழங்கால தமிழ் நூல்களை படிப்பதற்காக சங்க இலக்கியம் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் கை.சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர், சீனிவாசன் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் சங்க இலக்கிய செல்போன் செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களுக்கான பதிப்புகளை எளிதாக தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

இதுகுறித்து பேராசிரியர் கை.சங்கர் கூறும்போது, ‘‘தமிழ் மொழியில் ஆராய்ச்சிகளை அதிகரிக்க போதுமான வாய்ப்பு இருக்க வேண்டும். நூலகங்களில் பாதுகாக்கப்படும் அரிய நூல்களை ஒரு சிலரால் மட்டுமே ஆய்வு செய்ய முடியும். தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொள்பவர்கள் பலர்எளிய பின்னணி உடையவர்கள். அவர்களுக்கு பயன்படும் வகையில் சங்க இலக்கிய செயலிவடிவமைக்கப்பட்டுள்ளது. இனி தமிழ் ஆய்வாளர்கள் நூல்களுக்காக சென்னை, கும்பகோணம் என அலைய வேண்டியதில்லை. சங்க இலக்கியம் செயலியை பிளே ஸ்டோரில் சென்று (sangaelakkiyam app) பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்தலாம். யுஜிசி நிதியுதவியுடன் செய்வதால் விளம்பர தொந்தரவு இருக்காது. பாதுகாப்பானது. மேலும், பதிவேற்றாமல் விட்டசங்க இலக்கிய பதிப்புகளை வைத்துள்ளவர்கள் sankarthirukkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அவை உடனே பதிவேற் றப்படும்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close