[X] Close

நெல்லை சிவன் கோயில் சிலை திருட்டு வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்சா நள்ளிரவில் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 08:31 am
  • அ+ அ-

திருநெல்வேலி மாவட்டம் பழுவூர் நாறும்பூநாதர் சிவன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருடுபோன வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்சா(59) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் கடந்த 2008-ல் ஆரோக்கியராஜ் என்பவரது வீட்டில் அஸ்திவாரம் தோண்டும்போது சிவன், பார்வதி உள்ளிட்ட 6 பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. இந்த சிலைகளை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்காமல், அதே ஊரைச் சேர்ந்த சந்தானம் என்பவருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று விற்க முயன்றார் ஆரோக்கியராஜ்.

இதுகுறித்து தகவலறிந்த அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் மற்றொரு போலீஸ்காரர் என 3 பேரும், சிலைகளை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சிலை கடத்தல்காரர்களிடம் ரூ.15 லட்சத்துக்கு 6 சிலைகளையும் விற்றுவிட்டனர்.

இதுதொடர்பாக ஆரோக்கிய ராஜ் அளித்த புகாரின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், திருவள் ளூர் மாவட்டத்தில் காவல் துணைகண்காணிப்பாளராக இருந்த, தலைமறைவான காதர்பாட்சாவை கடந்த 13.9.2017 அன்று கும்பகோணத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுகாதர்பாட்சா வெளியே வந்திருந் தார்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பழுவூர் நாறும்பூநாதர் சிவன் கோயிலில் நடராஜர் சிலை காணாமல் போன வழக்கை அப்போது விசாரித்த காதர்பாட்சா, அந்த வழக்கில் தொடர்பில்லாத 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு தற்போது கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காணாமல்போன நடராஜர் சிலையை காதர்பாட்சா, தீனதயாளன் மூலம் ரூ.40 லட்சத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ்சந்திர கபூரிடம் விற்றுள்ளார்.

இந்த வழக்கை தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரித்து வருகிறார். இந்நிலை யில், நாறும்பூநாதர் கோயில் நடராஜர் சிலை அமெரிக்காவில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, கொல்கத்தா வில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத் தில் இருப்பது தெரியவந்தது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கொல்கத்தாவுக்குச் சென்று, அந்த சிலை யாருக்காக கொண்டு வரப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பது குறித்துவிசாரித்தபோது, டிஎஸ்பி காதர்பாட்சாவுக்காக கொண்டுவரப்பட் டது என்பது உறுதியானது.

இதையடுத்து டிஎஸ்பி காதர் பாட்சாவை நேற்று முன்தினம் நள்ளிரவு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து காதர்பாட்சா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close