[X] Close

360: அப்பாக்களுக்காகக் களமிறங்கும் வாரிசுகள்


360

  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:10 am
  • அ+ அ-

அதிமுகவை விட்டுச்சென்றவர்கள் வென்றதாக சரித்திரமே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தேனியில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் கூட்டணிக் கட்சிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் வர வேற்றார். இதில் அமைச்சர் உதயகுமார் உட்பட பலர் பேசினர்.தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டப் பேரவை வேட்பாளர் லோகிராஜன் ஆகியோ ரை அறிமுகப்படுத்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: இது திணிக்கப்பட்ட இடைத் தேர்தல். கட்சிக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டு வெளியேறியதால் இந்நிலை உருவாகி உள்ளது.

இன்றைக்கு இவர்கள் செல்லாக்காசாக இருக்கிறார்கள். அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதனால்தான் இக்கட்சி வலுவாக உள்ளது. அதிமுகவை விட்டுச்சென்றவர் கள் வென்றதாக சரித்திரமே இல்லை. அதிமுக கூட்டணி நல்லவர்கள் கூட்டணி. திமுக கூட்டணி துஷ்டர்களின் கூட்டணி. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

பார்த்திபன் எம்பி., சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், நீதிபதி, ஜக்கையன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close