[X] Close

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களால் பலன் பெறும் பாஜக


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:00 am
  • அ+ அ-

சிவகங்கை மாவட்டத்தில் கட்சி கூட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு கறி விருந்து அளிப்பது அதிகரித்துள்ளதால் ஆட்டு இறைச்சி விலை உயர்ந்துள்ளது.

தென் மாவட்டங்களில் எந்த விசேஷமாக இருந்தாலும் கறி விருந்தின்றி நடக்காது. தேர்தலும் ஒரு திருவிழாதானே என்ற எண்ணத்தில் தற்போது பல கட்சிகள் தங்களின்கூட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு கறி விருந்தும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு மட்டன் பிரியாணியும் வழங்குவது வழக்கமாகிவிட்டது.

தற்போது மக்களவை, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள் வியாபாரிகளிடம் மொத்தமாக ஆடுகளை வாங்கி வருகின்றனர். ஏற்கெனவே வறட்சியால் தண்ணீரின்றி ஆடுகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டன. இந்நிலையில் தேர்தல் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் ஆட்டு இறைச்சி விலை உயர்ந்துள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ஆடு வியாபாரி சன்னாசி கூறியதாவது: குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவொரு விசேஷமும் இல்லாத நிலையில், தேர்தல் காரணமாக ஆட்டிறைச்சி விலை உயர்ந்துவிட்டது. முன்பு கிலோ ரூ.450 என இருந்த விலை, தற்போது ரூ.600 ஆக உயர்ந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close