[X] Close

தேர்தலுக்கு பின் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 08:45 am
  • அ+ அ-

ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட் பாளர் நவாஸ் கனியை ஆதரித்து கனிமொழி எம்.பி. கன்னிராஜபுரம், நரிப்பையூர், சாயல்குடியில் பிரச்சாரம் செய்தார்.

சாயல்குடியில் அவர் பேசியதாவது: பாஜக அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. பாஜக சொல்வதைக் கேட்கும் பினாமியாக பழனிசாமி ஆட்சி உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வை கொண்டு வந்து பிற மாநிலத்தவர் படிக்க தாரை வார்த்துவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக கூறியதும், அதிமுகவும் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறியுள்ளது. அவர்கள் ஆட்சியில் இல்லையா?, இவ்வளவு நாட்களாக என்ன செய்தார்கள்? வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார் பிரதமர் மோடி.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துவேன் என்றார். ஆனால் இருக்கிற வேலைவாய்ப்பைப் பறித்துவிட்டார். இந்த ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவத்தில் முறையான நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசு மூடிமறைக்கப் பார்க்கிறது. திமுக ஆட்சியில் நரிப்பையூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அத்திட்டம் கூட மூடப்பட்டுவிட்டது. மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதையும் கிடப்பில் போட்டி ருந்தனர். வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிக்கின்றனர்.

இந்த தேர்தல் மூலம் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க திமுக முயற்சிக்கும். கிராமப்புற பெண்களுக்காக ரூ.50,000 வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் விவசாயக் கடன், கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட விட்டுவிடக் கூடாது. ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளர் நவாஸ் கனியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close