[X] Close

ஹோலி கொண்டாட்டத்தின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்: முதலுதவி அளித்து சிறுவனை காப்பாற்றிய புகைப்பட கலைஞர்


holi

மின்சாரம் தாக்கி வண்ண நீரில் விழுந்த சிறுவனை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து சிறுவனை காப்பாற்றிய ஏஜென்சி புகைப்படக் கலைஞர் ரவிக்குமார். படங்கள்:க.ஸ்ரீபரத்

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 07:03 am
  • அ+ அ-

ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீரில் 4 பேர் மூழ்கிய சம்பவம் வேப்பேரியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வசித்து வரும் வடமாநிலத்தவர்களும் இந்தப் பண்டிகையை நேற்று விமரிசையாகக் கொண்டாடினர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் பின்புறமுள்ள ஜோதி வெங்கடாச்சலம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத் தில் ஹோலி பண்டிகை நேற்று காலை கொண்டாடப்பட்டது.

இதற்காக அங்கு செயற்கையாக மேலிருந்து கீழ் நோக்கி தண்ணீர் விழுவதுபோல் (‌ஷவர்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நீர், தொட்டி போன்ற பகுதியில் நிரம்பியதும் அதில் இறங்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் குளித்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், பூசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தண்ணீர் தொட்டி யில், ஷவருக்காக பயன்படுத் தப்பட்ட ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் கசிந்ததாகக் கூறப் படுகிறது. இதில், குளித்துக் கொண்டிருந்த சிறுவன் உள்ளிட்ட 4 பேர் மின்சாரம் தாக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைக் கண்டு அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஜெனரேட்டரை நிறுத்திவிட்டு நீரில் மூழ்கியவர்களை விரைந்து சென்று மீட்டு முதலுதவி அளித்து காப்பாற்றினர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மட்டும் மயங்கி நிலைகுலைந்தான்.

ஹோலி கொண்டாட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்த தனியார் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் ரவிக்குமார் என்பவர் அந்தச் சிறுவனை மீட்டு உடனடியாக முதலுதவி அளித்துள்ளார்.

நெஞ்சில் கையை வைத்து அழுத்தியும், சிறுவனின் வாயில் தனது வாயை வைத்து ஊதியும் முதலுதவி அளித்துள்ளார். பின் னர், அங்குள்ளவர்கள், அந்தச் சிறுவனை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அனைவரும் நலமுடன் உள்ளனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து வேப்பேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் ஹோலி கொண்டாட்டத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக போலீஸார் நேற்று இரவு வரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close