மாநகராட்சி, நகராட்சி காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட்


சென்னை மாநகராட்சி

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை (சனிக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகியவற்றில் காலியாகவுள்ள 2,455 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஹால்டிக்கெட்டுகளை ஜூன் 22-ம் தேதி (நாளை) முதல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவித்துள்ளது. காலிப்பணியிடங்களின் பட்டியலில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.