[X] Close

தமிழகத்தில் கொடிகட்டி பறக்கும் வாரிசு அரசியல்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை


madurai-highcourt

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 06:55 am
  • அ+ அ-

கி.மகாராஜன்

பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர பிற கட்சிகளில் வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது. பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தேர்தல்களில் போட்டியிடுவோர் வேட்புமனுக்களுடன் தங்கள் மீதான குற்ற வழக்குகள், கல்வித் தகுதி, அசையும் மற்றும் அசையா சொத்து கள், கடன் இருப்பு ஆகிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவ ரங்கள் அளிக்கப்படாவிட்டால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்த விதியை தேர்தலில் போட்டி யிடுவோர் கடைபிடிப்பதில்லை. கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட பலரது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வேட்புமனுவுடன் சொத்து விவரங் களைத் தாக்கல் செய்யவும், தேர்தல் வாக்குறுதியை தனி பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு கட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அடுத்த விசாரணையின்போது திமுக, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். வழக்கறிஞர்கள் ஆஜராகாத காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உட்பட 9 கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம்அபராதம் விதித்தும், இப்பணத்தை போர் விதவைகள் சங்கக் கணக்கில் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபா கரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்கள், அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். அபராதத் தொகையை செலுத்தினால் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும்எனக் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அபராதம் விதித்ததை திரும்பப்பெற முடியாது. கட்சிகள் அதை நன்கொடையாக வழங்கலாம் என்றனர்.

கம்யூனிஸ்ட் விதிவிலக்கு

தொடர்ந்து நீதிபதிகள், "பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்கு விக்கின்றன. வாரிசு அரசியலுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்காக உள்ளன. சில மாநிலங்களில், பாஜகவிலும் வாரிசு அரசியல் இல்லை என கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் சில 100 குடும்பங்களும், தமிழகத்தில் சில 10 குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருக்க விரும்புகின்றன. முன்னாள் முதல்வர் அண்ணாவின் மகன் வறுமையால் தற்கொலை செய்து கொண்டார். அண்ணா பெயரை சொல்லி கட்சி நடத்தும் திமுக, அதிமுக கட்சிகள் அவரை கண்டுகொள்ளவில்லை" என்றனர்.

இதற்கு திமுக வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் இக்கருத்து ஊடகங்களில் வெளியானால் தேவையற்ற சர்ச்சை ஏற்படும் என்றார்.

அதற்கு, தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா. இதனால் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அதற்கு உரிமை உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் தமிழகத்தில் இருந்து மக்களவைக்குச் சென்ற செழியன், மோகன் குமாரமங்கலம், சிதம்பரம், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டோர் மிகுந்த ஆங்கிலப் புலமையுடன் இருந்தனர். அவர்களைப் போன்ற ஆங்கில அறிவு தேர்தலில் போட்டியிடுவோருக்கு அவசி யம் எனவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசப் பொருட்கள் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடத் தடை விதிக்க வேண்டும். அக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் அரசு பணத்தில்தான் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட கட்சிகளின் நிதியில் இருந்து இலவசப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கு மக்களவைத் தேர்தலுடன் தொடர்புடையது இல்லை. இதனால் இந்த நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படும் என்று கூறி அடுத்த விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close