[X] Close

இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார், எஸ்.பி.முத்துராமன், பாலா, அமீர், சேரன், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தமிழச்சி தங்கபாண்டியன், கார்த்திக் சுப்பராஜ்


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 16:25 pm
  • அ+ அ-

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று டன் முடிவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30-ல் தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை யின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தன. இறுதிநாளில் உயிரியல், தாவர வியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக் குப் பதிவியல் மற்றும் தணிக்கை பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வை மாநிலம் முழு வதும் உள்ள 2,944 மையங்களில் 8.2 லட்சம் பேர் எழுதினர். இதில் உயிரியல், தாவரவியல், வணிக கணிதம் பாடத்தேர்வுகள் மட்டும் சற்று கடினமாக இருந்த தாக மாணவர்கள் கூறினர். இந் நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கள் முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டனர். தேர்வு மையத்தில் இருந்து வெளியேறியதும் மாணவர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30-ல் தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே பிளஸ் 1 வகுப்பில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று (மார்ச் 20) காலை நடைபெறுகிறது.

இந்தத் தேர்வை மாநிலம் முழு வதும் 2,914 மையங்களில் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதைத்தொடர்ந்து மதியம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் முதல் தாள் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close