[X] Close

சொல்லாததை செய்து மக்களை பரதேசி ஆக்கியவர் மோடி: ப. சிதம்பரம் கடும் தாக்கு


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 13:03 pm
  • அ+ அ-

டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே கூட்டணி அமைய தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் தீவிர சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், ஷரத் பவாரை இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பொதுவான வேட்பாளரை அனைத்து தொகுதிகளுக்கும் கண்டுபிடித்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே இவர்களது முயற்சி. 

காங்கிரஸ் தரப்பிலும் ஆம் ஆத்மி தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆம் ஆத்மியுடன் நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் டெல்லியில் லோக்சபா தேர்தலில் தனியாக போட்டியிட காங்கிரஸ் முன்பு முடிவெடுத்திருந்தது. 

மேற்கு வங்கத்தில் இடது சாரிகளுடன் கூட்டணியமைக்கவும் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தள் ஆகிய மகாக்கூட்டணியிலிருந்தும் காங்கிரஸ் வெளியேறியது. 

இந்நிலையில் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் டெல்லி காங்கிரஸ் தலைவருமான பி.சி. சாக்கோ பிடிஐ செய்தியில் கூறும்போது, “டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறேன், அதாவது ஆம் ஆத்மியுடன் கூட்டணி சாத்தியங்கள் பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்க்கிறோம். 

உடன்படு கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜகவை முறியடிக்கவே பல கூட்டணிகளில் ஈடுபட்டுள்ளோம். டெல்லி காங்கிரஸ் தலைவர்களும் இந்த உணர்வின்படி ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்குச் சம்மதிப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் இறுதி முடிவு காங்கிரஸ் தலைவரால்தான் எடுக்க முடியும். 

ஆனால் ஷீலா திக்‌ஷித், சட்டப்பேரவை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க தலைமை முடிவெடுக்காது என்று கூறிவருகிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close