[X] Close

தவறு செய்யவில்லை; அதனால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை: விஜயபாஸ்கர்


we-have-not-done-nothing-wrong-so-we-dont-have-to-fear-anybody

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Apr, 2018 14:16 pm
  • அ+ அ-

தவறு செய்யவில்லை; அதனால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என குட்கா வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
குட்கா ஊழல் புகார் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் அக்கட்சியின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர், "பொதுவாழ்வில் இருக்கும் யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகள் எழலாம். நாங்கள் எவ்விதத் தவறையும் செய்யவில்லை; அதனால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

குட்கா முறைகேடு விவகாரத்தில் முறையாக விசாரணைக்கு சிபிஐ விசாரணை தேவை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.  கடந்த ஜனவரி 25-ம் தேதி வழக்கின் அனைத்து தரப்பு வாதமும் முடிந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close