[X] Close

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்: விரைவில் தீர்ப்பு என உயர் நீதிமன்றம் அறிவிப்பு


thiruparangkundram

  • kamadenu
  • Posted: 19 Mar, 2019 09:34 am
  • அ+ அ-

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 2016 நவம்பரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்பி.சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குதொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போதே ஏ.கே.போஸ் இறந்து விட்டார். அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் கடந்தஆண்டு நவம்பரில், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தற்போது இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளது என்றும் முறையீடு செய்தார்.

அதையடுத்து நீதிபதி, ‘இந்தவழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தலை நடத்தக் கூடாதுஎன எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையே என தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் (மார்ச் 22) இந்த வழக்கில்தீர்ப்பளிக்கப்படும்’ என தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close