[X] Close

காவிரியில் தண்ணீர் வராததற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் தஞ்சாவூர் பிரச்சாரத்தின்போது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 07:59 am
  • அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கான 40 மக்களவைத் தொகுதி கள் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு சட்டப்பேர வைத் தொகுதியின் இடைத்தேர் தலுக்கான வேட்பு மனுத்தாக் கல் இன்று தொடங்குகிறது. இந்த தேர்தலில் வேட்பாளர் களுக்கு பல்வேறு புதிய கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வரும் 23, 24-ம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகள் என்ப தால் வேட்பு மனுக்கள் பெறப் படாது என்று அறிவிக்கப்பட் டுள்ளது. மக்களவைத் தேர் தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச் சேரியில் உள்ள 40 மக்கள வைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் 2-வது கட்டத்தில், ஏப்ரல் தமிழகத்தில் 18-ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அறிவிக்கை இன்று (மார்ச் 19-ம் தேதி) வெளியிடப்படுகிறது. இதை யடுத்து, இன்றே வேட்பு மனுத் தாக்கலும் தொடங்குகிறது. வேட்பு மனுக்களை வரும் 26-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்களை பெறு வதற்காக அந்தந்த தொகுதி களில் தேர்தல் நடத்தும் அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய லாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களும் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

வேட்பு மனுவுடன், மக்கள வைத் தொகுதிக்கு பொது வேட் பாளர் ரூ.25 ஆயிரம், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின வேட் பாளர் ரூ.12 ஆயிரத்து 500 வைப் புத் தொகை செலுத்த வேண்டும். சட்டப்பேரவை தொகுதிக்கு பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்றால் ரூ.5 ஆயி ரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.

இந்த வைப்புத் தொகையை, ரொக்கமாகவோ ரிசர்வ் வங்கி சலானாகவோ மட்டுமே செலுத்த முடியும். காசோலை ஏற்கப்பட மாட்டாது.

மேலும், வேட்பு மனுவுடன் படிவம் 26-ல் வழக்கமான சுய விவரம், சொத்து உள்ளிட்ட தகவல் களுடன் புதிய விவரங்களையும் இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஏற் கெனவே, ஒரு ஆண்டுக்கு மட்டுமே வருமான வரி கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இம் முறை 5 ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிக்கப்படாத குடும்ப சட் டத்தின்படியான சொத்துக் கள் வேட்பாளருக்கு இருந் தாலோ, வெளிநாட்டில் சொத் துக்கள் இருந்தாலோ அவற் றின் விவரங்களை அளிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் மீதான தண்டனை வழக்கு கள், நிலுவையில் உள்ள வழக்கு களை குறிப்பிடுவதுடன், வேட்பு மனு தாக்கல் நாளில் இருந்து, வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன் வரை 3 முறை உள்ளூர் நாளிதழ், தொலைக் காட்சியில் வழக்குகளை விளம் பரப்படுத்த வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், கட்சி யிடம் வழக்கு விவரங்களை அளித்து, சம்பந்தப்பட்ட கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட் பாளர்கள் தொடர்பான வழக்கு களை விளம்பரமாக வெளியிட வேண்டும்.

வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர் செல்லும்போது, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத் தும் அலுவலர் அலுவலகத் துக்கு 100 மீட்டருக்குள் 3 வாக னங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். அத்துடன், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கத்துக்குள் வேட்பாளர் மற்றும் 4 பேர் என 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் வேட்பாளர் கள் அனுமதி தொடர்பாக கேட்டபோது, ‘‘அங்கீகரிக்கப் பட்ட கட்சி, பதிவு செய்த கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என யார் வந்தாலும், முதலில் வருபவர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும்’’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close