[X] Close

அமித்ஷா, முதல்வர் பழனிசாமி தூத்துக்குடியில் இன்று பிரச்சாரம்: மோடி ஏப்.8-கோவை, 13-ல் ராமநாதபுரம், தேனி வருகை


8-13

  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 07:53 am
  • அ+ அ-

காரைக்குடியில் அமமுக தொண்டர் களுக்கு பிரியாணி பொட்டலம், பரிசுப்பொருட்கள் விநியோகிக் கப்பட்டன. அதை புகைப்படம் எடுத்தோரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதால் செய்தி யாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அமமுக சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாள ராக தேர்போகி பாண்டி, மானா மதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக மாரியப்பன் கென்னடி ஆகியோர் அறிவிக்கப் பட்டுள்ளனர். நேற்று இவர்கள் தொண்டர்களுடன் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள் ளிட்ட இடங்களில் தேர்தல் அலு வலகங்களை திறந்தனர்.

படம் எடுத்ததால் எதிர்ப்பு

தொடர்ந்து காரைக்குடி கல்லூரிச் சாலையில் தேர்தல் அலுவலகம் திறப்பு, வேட்பாளர் அறிமுகம் நடந்தது. இதில் அமமுக தொண்டர்களுக்கு மஞ்சள் பைக ளில் பிரியாணி பொட்டலங்கள், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதைச் செய்தியாளர்கள் புகைப் படம் எடுத்தனர்.

இதற்கு அமமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் செய்தி யாளர்கள் அங்கிருந்து வெளியேறி னர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த மாவட்டச் செயலாளர் உமா தேவன் செய்தியாளர்களை ஒருமை யிலும், அவதூறாகவும் பேசி னார். இதனால் அதிருப்தி அடைந்த செய்தியாளர்கள் மறியலில் ஈடு பட்டனர்.

போலீஸில் புகார்

போலீஸாரின் சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து கலைந்து சென்றனர். தொடர்ந்து காரைக்குடி பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் அமமுக மாவட்ட செயலாளர் உமாதேவன் மீது போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப் பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close