[X] Close

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வரின் பிரச்சார வேன் மீது காலணி வீச்சு; தஞ்சாவூரில் திமுக அலுவலகம் எரிப்பு: இரு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என போலீஸார் விசாரணை


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 07:47 am
  • அ+ அ-

ஆர்.ஷபிமுன்னா

மக்களவையுடன் சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒரே கட்சிக்கே 77 சதவீத வாக்குகள் பதிவாவது தெரியவந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அறிவுசார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மும்பையில் செயல்படும் தனியார் நிறுவனமான ஐடிஎப்சி, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் தொடர்பாக பல ஆய்வு களை செய்வதுடன் கணக்கெடுப்பு களும் நடத்துகிறது. மக்களவை யுடன் சட்டப்பேரவைக்கும் இணைந்து தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இதன் சார்பில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. நாட்டின் பெரும்பாலான மாநிலங் களில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வின்படி, 77 சதவீதம் பேர் இரு தேர்தல்களுக்கும் ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக் களித்தது தெரியவந்துள்ளது. இது போல ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் முறை கடந்த 1999-ம் ஆண்டு முதல் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை என அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முறை, மக்களவையுடன் சேர்த்து ஒடிசா, சிக்கிம், ஆந்திரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வழக்கமாக மக்களவைத் தேர்தல் முடிந்த சில மாதங்களுக் குப் பிறகு, சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறு வது உண்டு. மக்களவைத் தேர்தல் முடிந்து 6 மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும், முந்தைய தேர்த லில் வெற்றிபெற்ற கட்சிக்கு 61 சதவீதம் பேர் மட்டுமே வாக் களிப்பதாக ஐடிஎப்சி கூறியுள்ளது. 2004-ல் மக்களவையுடன் சேர்த்து கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதுபோல மக்கள வையுடன் ஒடிசா, சிக்கிம், ஆந்திரா சட்டப்பேரவைகளுக்கும் 2009-ல் தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும் பெரும்பாலான தொகுதிகளில் ஒரே கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றிருந்தனர். இதுபோல, இந்த ஆண்டும் மக்களவைத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் ஹரியாணா, ஜார்க்கண்ட் மற்றும் மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவை களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் மக்களவையுடன் சேர்த்து நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் இது போன்ற பலன் ஏற்படுவது தெரியவந்துள்ளது. அதிலும், இந்த வகை வாக்களித்தல், அதிகமான தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல்களிலும் அதிகம் ஏற்படுவ தாக ஐடிஎப்சி கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் மக்களவை யுடன் 18 சட்டப்பேரவை தொகுதி களில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு இதுபோன்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதன் ஓரிரு தொகுதிகளில் வரும் இடைத்தேர்தல்களிலும், வெற்றி பெற்ற கட்சியே தட்டிச் செல்வதற்கும் வாக்காளர்களின் இதுபோன்ற மனநிலையே காரணமாக அமைந்துள்ளது. இதனால்தான் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் இடைத்தேர்தல்களில் தீவிரப் பிரச்சாரம் செய்வதில்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close