[X] Close

அரசுப் பள்ளி ஆசிரியை பார்வையில் ‘சூப்பர் டீலக்ஸ்’


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 16:26 pm
  • அ+ அ-

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஈரோடு வேட்பாளராக கூட்டணி கட்சி மதிமுகவின் கணேசமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு கிண்டலடித்த எச்.ராஜாவுக்கு சுப.வீ பதிலடி கொடுத்திருக்கிறார்.

முன்னதாக, பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில். "படித்ததில் பிடித்தது. நாத்திக வாதம் பேசி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை உடைத்த ஈ.வெ..ரா பிறந்த ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அதே நாத்திக கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் பெயர் கணேச மூர்த்தி. What an irony" எனப் பதிவிட்டார்.

இதற்கு ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்த தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த சுப.வீரபாண்டியன், "ஒரு பகுத்தறிவாளரின் பெயர் கணேசமூர்த்தி என்று இருப்பது சாதாரண முரண்தான். மக்களைத் தவிக்க விட்டவர்கள், தங்களுக்குத் தாங்களே "மக்கள் காவலர்கள் " #Chowkidar என்று பெயர் சூட்டிக் கொள்வதுதான் பெரிய முரண். @HRajaBJP #DMKAlliance" என பதிலடி கொடுத்திருக்கிறார்.

சவுகிதார் சர்ச்சைதான் என்ன? 
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார். ஆனால், ரஃபேல் போர் ஒப்பந்த ஊழல் குறித்த பேச்சின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளி ஒரு திருடன் என்று மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டி வருகிறார். 

ராகுல் காந்தி அடிக்கடி கூறிவரும் காவலாளி ஒரு திருடன் எனும் வார்த்தைக்குப் பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, தான் மட்டும் காவலாளி அல்ல, மக்கள் அனைவரும் காவலாளிகள்தான் என்று காவலாளி என்ற வார்த்தையை பொதுமைப்படுத்திவிட்டார்.

தனது பெயருக்கு முன்னாள் சவுகிதார் என்ற வார்த்தையை பிரதமர் மோடி சேர்த்துள்ளார். இதனைப் பின்பற்றி தேசிய அளவில் பாஜக பிரமுகர்கள் தங்கள் பெயர் முன் சவுகிதார் என்ற வார்த்தையை சேர்த்து வருகின்றனர். தமிழகத்திலும்கூட தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் இந்த வார்த்தையை தங்கள் பெயருக்கு முன்னாள் சேர்த்திருக்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close