[X] Close

மது விற்பனைக்கு வயது வரம்பு: உயர்த்துவதற்கு நீதிமன்றம் யோசனை


tasmac-sales

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 09:34 am
  • அ+ அ-

தமிழகத்தில் மது விற்கப்படுவோருக்கான வயது வரம்பை 21-ல் இருந்து 25 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த அஞ்சம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் உப்பிலியக்குடி குடியிருப்புப் பகுதி டாஸ்மாக் கடையை மூட கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், "தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதியில் 21 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கு மதுபானம் விற்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கலாம். இந்த விதிப்படி இதுவரை ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யப்படவில்லை.

மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா, மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மது விற்கப்படுவோரின் வயது வரம்பு 25ஆக உள்ளது. அந்த மாநிலங்களில் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை. அதன்படி தமிழகத்திலும் மது விற்கப்படுவோரின் வயது வரம்பை 21-ல் இருந்து 25 ஆக உயர்த்தலாம். இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யலாம். வயது வரம்பு விதிமீறல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close