[X] Close

‘தளபதி 63’ அப்டேட்: நயன்தாரா அப்பாவாக நடிக்கும் கு.ஞானசம்பந்தன்


63

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 17:00 pm
  • அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி தாமரைக் கோலம் அழிக்கப்பட்டதால், அந்த இடத்தில் நேற்று புதிதாக ரங்கோலி கோலம் இடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாரை வரவேற்க கோயிலின்கிழக்குப் பிரதான நுழைவாயிலில் வழக்கமாக வரையப்படும் தாமரைக் கோலம் இடப்பட்டிருந்தது.

பாஜக சின்னமான தாமரையும், அதிமுக சின்னமான இரட்டை இலையும் கோலத்தில் உள்ளதாகக் கூறி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை போலீஸார் சுட்டிக் காட்டியதால் கடந்த புதன்கிழமை மாலை இக்கோலம் அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில், தாமரைக் கோலம் அழிக்கப்பட்ட அதே இடத்தில் நேற்று கோயில் நிர்வாகத்தால் புதிதாக ரங்கோலி கோலம் வரையப்பட்டது. அதில், எவ்விதமான கட்சி சார்ந்த நிறமோ, சின்னமோ இல்லாமல் அந்த கோலம் வரையப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறியபோது, 'திருவிழாக் காலத்தில் கோயில் வளாகத்தில் கோலம் இல்லாமல் இருப்பது நெருடலாக இருந்தது. அதனால், பூக்கோலம் வரையாமல், எவ்வித சர்ச்சையும் ஏற்படாத வகையில் வண்ண ரங்கோலிக் கோலம் வரைந்துள்ளது' என்று தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close