[X] Close

எப்படியிருந்த திமுக, இன்று இப்படியாகிவிட்டது? - அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 15:41 pm
  • அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்  அறிவிக்கப்பட்டது. இதில் தேமுதிக, பாமக வராதது ஏன்? என குறித்து தமிழிசை சவுந்தரராஜன்  விளக்கம் அளித்தார்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர், இதில் பாஜக தலைவர் தமிழிசை கலந்து கொண்டார்.

ஆனால், மற்ற கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,

“தேமுதிக - பாமகவினர் ஏற்கனவே தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டதால் இன்று வரவில்லை. தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திடாத பாஜக உள்ளிட்ட கட்சிகள் தான் இன்று பங்கேற்றன. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் ஒற்றுமையாக இருக்கின்றனர். விமர்சனம் இல்லை, விமரிசையாக வெற்றி பெறுவோம்.

பாஜகவுக்கான தொகுதி பங்கீடு பட்டியலுடன் இன்று டெல்லி செல்கிறேன். பாஜகவுடன் தலைமையுடன் ஆலோசித்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை தமிழகம் வருகிறார். அதிமுக வாக்குகளை பிரிக்கும் அளவுக்கு அமமுகவுக்கு பலம் இல்லை. எத்தனை தொகுதிகளில் தினகரனால் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துவிட முடியும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close