[X] Close

பொறியியல் கலந்தாய்வு விவகாரங்களில் அண்ணா பல்கலைக்கழகம் தலையிடாது: துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 06:17 am
  • அ+ அ-

நா.இரமேஷ்குமார்

“அரவிந்த்சாமி, ரெஜினா, பேபி மோனிகா இந்த மூணு பேரை வெச்சு செல்லுலாய்டுல வரைஞ்சிருக்கிற ரங்கோலிதான் சார் ‘கள்ளபார்ட்’. இந்தப் படம் அரவிந்த்சாமியை வேற ஒரு லெவலில் நமக்கு காட்டும்” என்று ரசனை மிளிர ஆரம்பிக்கிறார் ‘கள்ளபார்ட்’ இயக்குநர் ராஜபாண்டி.

நியூஸ் சேனல்களில், தேமுதிக நிர்வாகிகளை துரைமுருகன் வெச்சு செய்து கொண்டிருந்த நேரத்தில் தி.நகர் பனகல்பார்க் அருகே இயக்குநரைச் சந்தித்தேன்.

“சினிமா கனவுல மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன் சார். யோசிச்சுப் பார்த்தா வாழ்க்கை, நாம எதிர்பார்க்காத திருப்பங்களை எல்லாம் நமக்காக உருவாக்கி வெச்சிருக்கு. திரைப்படக் கல்லூரியில் டைரக்‌ஷன் கோர்ஸ் முடிச்சுட்டு மணிரத்னம் சார்கிட்ட ‘திருடா திருடா’ படத்துல உதவியாளரா இருந்தேன். சின்ன மனஸ்தாபம்; பாதியில வெளியே வந்துட்டேன்.

அதன் பிறகும் என்னோட கனவுகள் நிறைய வாய்ப்புகளை உருவாக்கிக் குடுத்துச்சு. ஆனா, எதுவுமே கைகூடலை. ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’னு ரெண்டு படம் டைரக்ட் பண்ணியாச்சு. நல்ல இயக்குநர்னு பரவலா விமர்சனங்கள் வந்தாலும், கமர்ஷியலா படங்கள் பெருசா ஹிட்டாகல. ‘கள்ளபார்ட்’ அந்தக் குறையை நிச்சயம் போக்கிடும்.

‘கள்ளபார்ட்’ படம் ஆரம்பிச்சதே ஒரு கனவு மாதிரிதான் இருக்கு. ‘அச்சமின்றி’ படம் முடிச்சுட்டு, அடுத்து நடிகர் கார்த்திக் நடிக்கிற மாதிரியான ஒரு கதையைத் தயார் பண்ணிட்டு, அவர்கிட்ட கதை சொல்ல காத்துக்கிட்டிருந்தேன். அவரை மீட் பண்ண சரியான சந்தர்ப்பம் கிடைக்கலை. சரி, அவரை மீட் பண்ண தேதி கிடைக்கிற வரைக்கும் காத்திருக்காமல் சின்னதா வேற ஒரு கதையை ரெடி பண்ணலாம்னு ரெண்டு, மூணு கேரக்டர்களை மட்டுமே வெச்சு யோசிச்சப்போ உருவானதுதான் ‘கள்ளபார்ட்’ கதை. மக்கள் தொடர்பாளர் மெளனம் ரவி சார்தான் தயாரிப்பாளர்கிட்டே பேசி, இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். அப்படி ஆரம்பிச்ச படம், அரவிந்த்சாமி கமிட் ஆனதும் வேற லெவல்ல பெரிய புராஜெக்டா மாறிடுச்சு. இன்னமும் கார்த்திக்கிட்டேயிருந்து அழைப்பு வரலை.

படத்துல அரவிந்த்சாமி பேரு அதிபன். ஹார்ட்வேர் படிச்சுட்டு, பொறியாளரா வேலை பார்க்கிறார். எதிர்பாராத நேரத்துல அவருக்கு புதுசா ஒரு ரிலேஷன்ஷிப் கிடைக்குது. அந்த புது நட்பு, உறவு மூலமாக நடக்கிற சில திகிலான சம்பவங்களும், அந்த உறவை அவர் தொடர்ந்து தக்க வெச்சுக்கிட்டாரா, பிரிஞ்சுட்டாரான்னு போகிறதும்தான் கதை. வழக்கமான கிளாமர் ஹீரோயினா ரெஜினா இருந்தாலும், இந்தப் படத்துல சில காட்சிகள்ல ரொம்ப நல்லா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்திருக்காங்க. படத்துல ரெஜினா டான்ஸ் கற்றுத் தருகிற டீச்சரா வர்றாங்க. மூணு பாட்டு இருக்கு. அதுல ஒரு பாட்டை ரொம்ப ரகளையா ரெஜினாவை வெச்சு எடுக்கத் திட்டமிட்டிருக்கோம். கதைப்படி அவங்க டான்ஸ் கற்றுக் கொடுக்கிற டீச்சரா வர்றதால அந்தப் பாட்டுல நடனத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். இப்போதைக்கு அந்தப் பாட்டை ஆண்ட்ரியா பாடுறாங்கன்னு மட்டும்தான் முடிவாகியிருக்கு. பாடல் காட்சிகள் எதுவுமே இன்னும் ஷூட் பண்ணலை.

ஒரே இடத்துல நாலு பேரை வெச்சு ஷூட்டிங் எடுத்தது ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. அந்த சுவாரஸ்யத்தை ரசிகர்களும் அனுபவிக்கிற மாதிரி சொல்லியிருக்கேன். படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில பிரம்மாண்டமா மூன்று விதமான செட் போட்டு, 40 நாட்கள் ஷூட்டிங் எடுத்தோம்.

அரவிந்த்சாமி பிரமாதமான நடிகர். எல்லோரும் சொல்ற மாதிரி, அவரை வெச்சுப் படமெடுக்கிறது கஷ்டம் எல்லாம் கிடையாது. அவர் கேட்கிற சந்தேகங்கள் எல்லாமே படத்துக்கு நியாயம் செய்கிற மாதிரிதான் இருக்கும். சில விஷயங்கள்ல எங்களுக்குள்ளேயே நிறைய தடவை வாக்குவாதங்கள் நடந்திருக்கு. ஆனா, அது எல்லாமே படத்துக்கு நிச்சயம் தேவையானதா இருக்கும். படத்தோட ஒன்லைன், முழு திரைக்கதைன்னு ரெண்டு மூணு கட்டங்கள்ல படத்தைப் பற்றிய சரியான புரிதல் கிடைச்சவுடன்தான் நடிக்கச் சம்மதம் சொல்றார். அதே சமயம் படத்துல கமிட் ஆன பிறகு, முழு வீச்சில் அந்த கேரக்டராகவே மாறிடுவார். நாம என்ன சொல்றோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீன்ல பார்க்கும்போது இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும். ஆக்‌ஷன், த்ரில்லரா அத்தனை ரகளையா உருவாகியிருக்கு ‘கள்ளபார்ட்’. நிச்சயமா என்னோட சினிமா வாழ்க்கையில் எனக்கான சரியான விசிட்டிங் கார்டா இருக்கும்.”

பெருத்த நம்பிக்கையுடன் பேசுகிறார் ராஜபாண்டி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close