[X] Close

திமுக வேட்பாளர்கள் யார் யார்?- உத்தேச பட்டியல்


  • முத்தலீப்
  • Posted: 15 Mar, 2019 19:10 pm
  • அ+ அ-

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் மும்மூரம் காட்டி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. டிடிவி, கமல் போன்றோர் தனியாக நிற்கின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.  கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்திவிட்ட நிலையில் காங்கிரஸ் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்தது.

இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக சம்மதம் தெரிவித்தது. பின்னர் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக்கட்சிகள் முன்னிலையில் தங்கள் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் பட்டியலை அளித்தார்.

அதனடிப்படையில் கூட்டணிக்கட்சிகள் மொத்தமாக 20 தொகுதிகளிலும் திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஏற்கெனவே திமுக கூட்டணிக்கட்சிகள் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியிட்ட நிலையில் அடுத்து திமுக வட்டாரத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் திமுக வேட்பாளர் பட்டியல்:

திமுக தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் :

1. வடசென்னைடாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமியின் மகன்)

2. மத்திய சென்னை-  தயாநிதி மாறன்

3. தென்சென்னைதமிழச்சி தங்கபாண்டியன்

4. ஸ்ரீபெரும்புதூர்டி.ஆர்.பாலு

5. காஞ்சிபுரம் (SC) – அண்ணாதுரை அல்லது செல்வம்

6. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

7. வேலூர் - கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)

8. தர்மபுரிமணி அல்லது செந்தில் குமார்

9. திருவண்ணாமலைசி.என்.அண்ணாதுரை

10. கள்ளக்குறிச்சிகவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)

11. நீலகிரி- .ராசா

12. பொள்ளாச்சிகோகுல் (பொங்கலூர் பழனிச்சாமி மருமகன்)

13. திண்டுக்கல்வேலுச்சாமி

14. கடலூர் - கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)

15. மயிலாடுதுறைஇராமலிங்கம் (முன்னாள் எம்எல்ஏ) அல்லது ஜெகவீரபாண்டியன்

16. தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்

17. சேலம் - டாக்டர் பிரபு  

18. தூத்துக்குடிகனிமொழி

19. தென்காசி (SC) – தனுஷ்குமார் அல்லது பொன்ராஜ்

20. திருநெல்வேலிகிரகாம்பெல் அல்லது ஆரோக்கிய ஞானவேல்

மேற்கொண்ட நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என திமுக வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close