[X] Close

‘ஷிவம் துபே அவுட் ஆகியிருந்தால் நோ-பாலா என்று பார்த்திருப்பார்கள்’ - நோ-பால் சர்ச்சை குறித்து கைஃப் முதல் லாரா வரை சாடல்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 15:13 pm
  • அ+ அ-

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடமிருந்து ரூ.47.5 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கம் மற்றும் மயில் இறகுகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அகமதாபாத்திலிருந்து நேற்று சென்னை வந்த உள்நாட்டு விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு பயணியின் கைப்பையை சோதனை செய்தபோது, அதில் ரூ.46.5 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து சென்னை வந்த தனியார் விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை விமானத்தின் இருக் கையின் அடியில் மறைத்து வைத்துவிட்டு கடத்தல்காரர் சென்னையில் இறங்கிவிட்டார். அந்த விமானம் உள்நாட்டு விமானமாக அகமதாபாத் போய்விட்டு மீண்டும் சென்னை வந்தது. அதேகடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபர், அந்த விமானத்தில் பயணம் செய்து, இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார். உள்நாட்டு விமானத்தில் சுங்கத் துறை சோதனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரகசிய தகவலின்பேரில் சுங்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் தங்கத்துடன் அந்த நபர் சிக்கினார். அவரைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

இதேபோல் சென்னையிலி ருந்து இலங்கை வழியாக மலேசியாவுக்கு ரூ.1 லட்சம் மதிப்புடைய 18 கிலோ மயில் இறகுகளை, பூக்கள் அடங்கிய பார்சலில் வைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்கனி(36) என்பவர் விமானத்தில் கடத்த முயன்றார். அவரும் கைது செய்யப்பட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close