[X] Close

50 வயது பெண்ணுக்கு பாலியல் கொடுமை: காவலர் உட்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை


sex-abuse

சித்தரிப்புப் படம்

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 09:29 am
  • அ+ அ-

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர் உட்பட 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி அருகேயுள்ள வீரநாயக்கன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் சிவக்குமார் (22). தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலராக இருந்த இவர், டெல்லி திகார் சிறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த 14.08.2014-ல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது, நண்பரான அதே ஊரைச் சேர்ந்த சின்னத்துரை மகன் சக்திவேல் (25) என்பருடன் சேர்ந்து, அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 50 வயது பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ததாக, புகார் அளிக்கப்பட்டது.

முத்தையாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிவக்குமார், சக்திவேல் ஆகியோர் மீது, தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சிவக்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இவ்வழக்கில், சிவக்குமார், சக்திவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து, நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் நேற்று தீர்ப்பளித்தார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close