[X] Close

ஏடிஎம்மில் பணம் வைக்க செல்வோர் அடையாள அட்டை, ஆவணங்களுடன் செல்ல வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தல்


atm-machine

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 07:42 am
  • அ+ அ-

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சென்னையில் ஏடிஎம்மில் பணம் வைக்க செல்வோர் தங்கள் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்துவது குறித்தும், வங்கிப் பண பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும் வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை அரங்கில் நடைபெற்றது.

அதில் மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ளவங்கிகளில் சேமிப்பு கணக்கில்இருந்து வழக்கத்துக்கு மாறாகவோ, சந்தேகத்துக்கிடமாகவோ இரு மாதங்களில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்வோரின் பெயர் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் வருமானவரித் துறைக்குசம்பந்தப்பட்ட வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.

முகவர்கள், நிறுவனங்கள் ஆகியவை வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பவும், வேறு கிளைகளுக்கும் பணத்தை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்களையும், அடையாள அட்டையும் உடன் வைத்திருக்க வேண்டும்.

பணப் பரிவர்த்தனை

வேட்பாளர் அல்லது அவரை சார்ந்தவர் வங்கிக் கணக்கில் இருந்தோ, அரசியல் கட்சிகள் வங்கிக் கணக்கில் இருந்தோ ரூ.1 லட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டால் அதை உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் நாள்தோறும், அனைத்து வங்கிகளின் தினசரி பணப் பரிவர்த்தனை விவரங்களை பெற்று தேர்தல் செலவு கண்காணிப்பு குழுவிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்.லலிதா, ப.மதுசுதன் ரெட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எஸ்.திவ்யதர்ஷினி, பி.என்.தர், ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close