[X] Close

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா?- பியூஷ் கோயல் பதில்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 15:22 pm
  • அ+ அ-

பெண்களைப் பேணிக் காப்பதில் வட இந்தியாவைவிட தென் இந்தியாவே சிறந்து விளங்குவதாக ராகுல் காந்தி புகழாரம் சூடினார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.

பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது மாணவி ஒருவர், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, பாலின சமத்துவமின்மை குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ராகுல், ''பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியா சிறப்பாக விளங்குகிறது. இது உண்மை. நீங்கள் உத்தரப் பிரதேசத்துக்கோ, பிஹாருக்கோ சென்றால், அங்கு பெண்கள் நடத்தப்படும் விதங்களைக் கண்டு அதிர்ந்து போவீர்கள். பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கலாச்சாரத்துக்கான முன்னோடிகளில் ஒன்று தமிழகம்.

அதே நேரத்தில் தமிழகத்திலும் மாற்றம் வேண்டும். எந்தவிதத்திலும் பெண்கள், ஆண்களுக்கு அடுத்தநிலை என்று நினைக்கவில்லை. அனைத்திலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் சமநிலையில் இருக்கவேண்டும்'' என்றார் ராகுல் காந்தி.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close