[X] Close

அமமுக சின்னம் ஒதுக்கும் விவகாரம்: தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 13:48 pm
  • அ+ அ-

சிவகங்கையில் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன், வருவாய் அலுவலர் லதா, உதவி தேர்தல் அலுவலர்கள் திருவாசகம், ஈஸ்வரி, செல்வக்குமாரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:தனசேகரன் (பாஜக), பெரேஸ்காந்தி (தேசியவாத காங்.): மதுரையை போல மானாமதுரையிலும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் திருப்புவனம், நாட்டரசன்கோட்டை பகுதிகளிலும் விழாக்கள் நடைபெறும். ஏப். 18-ல் தேர்தல் நடந்தால் பொதுமக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும்.

இளையான்குடி பகுதியில் 43 கிராமமக்கள் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க மதுரை சென்று விடுவர். இதனால் அவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆகவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும்.

சேங்கைமாறன் (திமுக): மதுரை ஆட்சியர் கூறியதை போல் வாக்குப்பதிவு நேரத்தையாவது அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியர்: சித்திரைத் திருவிழா குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும்.

சேங்கைமாறன்: பலமுறை இறந்தோர் பட்டியல் கொடுத்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்களை நீக்கவில்லை. அதேபோல் இரட்டை பதிவையும் நீக்கவில்லை.

ஆட்சியர்: பட்டியல் கொடுத்தால் இறந்தோர் பெயர், இரட்டை பதிவு உடனடியாக நீக்கப்படும். ரூ.2 ஆயிரம் வழங்குவதை நிறுத்திவிட்டனர். பதட்டமான வாக்குச்சாவடி விபரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close