[X] Close

யாருக்கு அதிக செல்வாக்கு என நிரூபிப்போமா? - முதல்வர் பழனிசாமிக்கு உதயநிதி சவால்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 12:34 pm
  • அ+ அ-

கடந்த கால தேர்தல்களில் அறிவிக்கப்பட்ட சலுகைகளால் தேனி தொகுதி பிரதான கட்சிகள் தற்போது ‘எலைட் ’ வேட்பாளர்களையே களம் இறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தொகுதி மறு சீரமைப்பில் பெரியகுளம் தொகுதி தேனி தொகுதியாக உருமாற்றம் கண்டது. இதன்படி இத்தொகுதியில் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, கம்பம், போடி உள்ளிட்ட தொகுதிகளும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி தொகுதிகளும் அடங்கியுள்ளன.

இப்பகுதியில் ஆரம்பத்தில் மாநில கட்சிகளின் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. மேலும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு அதிகம் இருந்ததால் இத்தொகுதியின் ஆரம்பம் முதல் காங்கிரஸ் வசமே இருந்தது. முதல் மூன்று தேர்தல்களிலும் (1952 முதல் 67 வரை) சக்திவேல்கவுண்டர், நாராயணசாமி, மலைச்சாமி தேவர் ஆகியோர் வேட்பாளர்களாக இருந்தனர்.

பின்பு சுதந்திரா கட்சி, இந்திய முஸ்லிம் லீக் என்று மாற்றுக் கட்சிகள் இத்தொகுதியைக் கைப்பற்றின. 1977-ல் ராமசாமி, 1980-ல் கம்பம் நடராஜன் வெற்றி பெற்று இத்தொகுதியின் அதிமுக, திமுகவின் முதல் வேட்பாளர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றனர். இதுவரை நடைபெற்ற 16 தேர்தல்களில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் விசுவாசம், உழைப்பு, செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்கள் களம் கண்டு வந்தனர். இந்நிலையில் இங்கு 1999-ல் டிடிவி.தினகரன் புதுமுகமாக களமிறங்கியபோது பல்வேறு மாற்றங்களைக் கண்டது. அணிவகுக்கும் கார் பவனி, கோயில், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு அள்ளி இறைக்கப்படும் பணம், எங்கு பார்த்தாலும் அதிமுக பிரச்சாரம் என்று களைகட்டியது. இவரது வெற்றி இத்தொகுதி வேட்பாளர்களுக்கான தகுதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பின்பு 2004-ல் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டபோது தினகரனுக்கு நிகராகப் பொருளாதார, சமூக உயர் நிலையில் உள்ள (எலைட்) வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த ஆரூண்ரஷீத் களமிறக்கப்பட்டார். இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலிலும் இவரே வெற்றி பெற்றார்.

தற்போது இத்தொகுதியில் மேல்தட்டு வேட்பாளர்கள் நின்றால்தான் எதிரணியைச் சமாளிக்க முடியும் என்ற நிலை கட்சிகளுக்குள் உருவாகியுள்ளது. இதனால் இத்தொகுதியில் மீண்டும் ‘எலைட்’ வேட்பாளர்களே களம் காணும் நிலையில் உள்ளனர்.

அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபி.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஆரூண்ரஷீத் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இரண்டு அணிகளிலுமே பல ஆண்டுகள் கட்சிக்கு உழைத்தவர்கள், விசுவாசத்துடன் செயலாற்றியவர்கள், களப்பணியில் அசத்தியவர்கள் என்று இருந்தாலும் போட்டி என்று வரும்போது ‘மிகை பொருளாதாரம்’ இத்தொகுதியில் பிரதானத் தகுதியாக அமைந்துவிட்டது. இதனால் இம்முறை பணப்பரிவர்த்தனைகள் சற்று அதிகமாகவே இருக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close