[X] Close

ராமநாதபுரம் பாஜக வேட்பாளருக்கு எதிராக 'உள்ளடி' வேலை- கரைசேருவாரா நயினார் நாகேந்திரன்?


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 10:37 am
  • அ+ அ-

மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளிலும் அம்பேத்கர் முன்னணி போட்டியிடும் என பிரகாஷ் அம்பேத்கர் நேற்று அகோலாவில் அறிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமையும் என பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் தடைக்கற்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம். இனி கூட்டணிக்காக காங்கிரஸ் தலைமையிடம் பேசமாட்டோம்.

ஏற்கெனவே 22 தொகுதிகளுக்கு அம்பேத்கர் முன்னணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 26 தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்கப்படுவர்” என்றார். பிரகாஷ் அம்பேத்கர், பாரிப் பகுஜன் மகாசங் என்றகட்சியை நடத்தி வருகிறார்.

இவரது தலைமையில் தலித்கட்சிகள் ஒன்றிணைந்து அம்பேத்கர் முன்னணி என்ற பெயரில்போட்டியிடுகின்றன.

பாஜகவில் காங்கிரஸ் தலைவர்மகாராஷ்டிரா மூத்த காங்கிரஸ் தலைவரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜாய் விகே பாட்டீல் நேற்று பாஜகவில் இணைந்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தலைவர் ராவ்சாகேப் தான்வே ஆகியோர் முன்னிலையில் அவர்கட்சியில் இணைந்தார். சுஜாய் பாஜகவில் இணைந்தது, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close