[X] Close

பற்றி எரியுது குப்பைமேடு... டன் கணக்கில் சேருவதால் திகைக்கும் உள்ளாட்சி அமைப்புகள்!


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 10:08 am
  • அ+ அ-

கட்சி தொடங்கி முதல் தேர்தலைசந்திக்க உள்ள மக்கள் நீதி மய்யம், தேர்தல் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து அதை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தேர்தல் அறிக்கையில் எந்த இலவச பொருட்களும் இடம் பெறகூடாது. மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். விவசாய நிலங்களை வேறுஎந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் வகையில் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் முக்கிய கட்சிகள் அறிவிப்பதுபோல, மக்களுக்கு இலவச பொருட்களை வழங்காமல் அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி இடம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வாக்குறுதிகள் இடம்பெறும். இதுமட்டுமின்றி, தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையிலும் சில வாக்குறுதிகளை வழங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close