[X] Close

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம்: டிஜிபியிடம் கமல்ஹாசன் மனு


pollachi-case

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி டிபிஜியிடம் மனு அளித்துவிட்டு வெளியே வரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் | படம்: ம.பிரபு

  • kamadenu
  • Posted: 13 Mar, 2019 11:04 am
  • அ+ அ-

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக குற்றவாளி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து மனு அளித்தார்.

பின்னர், கமல்ஹாசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி தொடர்பான செய்திகள் பதற்றத்தை அளிக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக யாரும் தயவு செய்து இந்தநிலைமையை ஊதி பெரிதாக்கிவிட வேண்டாம் என்பதுதான் காவல்துறையின் வேண்டுகோளாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர் விவரங்கள் காவல்துறை விசாரணை தொடர்பாக மாறுபட்ட கருத்து இருப்பதையும் டிஜிபியிடம் எடுத்துச் சொன்னோம். பாதிக்கப் பட்டவர்களின் படம், பெயர்களை தெரியாமல் வைத்திருப்பது நமதுகடமை. தயவு செய்து பாதிக்கப் பட்டவர்களின் விவரங்கள் ஊட கங்களில் வராமல் பாதுகாக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் பேசு பவர்கள் அனைவரும் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் கோபத்தில் பேசுவதை எல்லாம் சட்டமாக செயல்படுத்த முடியாது. பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவரின் பெயரை காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டது தவறு. அதையும் டிஜிபியிடம் கூறினோம்.

சட்டம் ஒழுங்கு பாதிக்கப் பட்டால் அதற்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை. அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close