[X] Close

பசு பாதுகாப்பை காங்கிரஸ் எப்போதுமே ஆதரித்துள்ளது!- கமல்நாத் பேட்டி


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 08:48 am
  • அ+ அ-

அதிமுகவில் 39 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி கள் முடிவானதும் விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1,750-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுஅளித்தனர். மனு அளித்தவர் களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் தொடங்கியது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி, துணை ஒருங் கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் ஆட்சிமன்றக் குழுவில் உள்ள பி.வளர்மதி, தமிழ்மகன் உசேன் மற்றும் மக்களவை குழு தலைவர் பி.வேணுகோபால் எம்பி ஆகியோர் நேர்காணலை நடத்தினர். முதல் நாளில் 20 தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது.

இதைத் தொடர்ந்து 2-வது நாளான நேற்று காலை திரு வள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 10 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதில், தற்போதைய எம்.பி.க்களான தென்சென்னை – ஜெ.ஜெயவர்தன், மத்திய சென்னை- எஸ்.ஆர்.விஜயகுமார், வடசென்னை – வெங்கடேஷ் பாபு, ஸ்ரீ பெரும்புதூர்- ராமச்சந்திரன், காஞ்சிபுரம்- மரகதம் குமரவேல், திருவள்ளூர்- வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாலை 4 மணிக்கு நடந்த நேர்காணலில் திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடு துறை, நாகை, தஞ்சை ஆகிய 9 தொகுதிகளுக்கு மனு அளித்தவர்கள் பங்கேற்றனர். நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தொகுதிக்கு ஆற்றிய பணிகள், தற்போதுதொகுதியில் வெற்றி வாய்ப்பு, வாக்கு சதவீதம், கட்சிப் பணி உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டன.

39 மக்களவைத் தொகுதிக ளுக்கான நேர்காணல் நேற்று டன் முடிந்தது. கூட்டணி கட்சி களுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதும், அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கூட்ட ணியி்ல் மேலும் ஒரு சில கட்சிகள் இணைய வேண்டியுள்ளது. கூட்டணி முடிந்ததும், போட்டி யிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிடும். அதிமுக போட்டியிடும் தொகுதிகளை ஏற்கெனவே கணித்து, இறுதி செய்து வைத்துள்ளதால் தொகுதிஒதுக்கீடு முடிந்ததும், அதிமுகவேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் படும். ஏற்கெனவே உள்ள எம்.பி.க்கள் சிலர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. புதியவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப் படவும் உள்ளது’’ என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close