[X] Close

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 08:40 am
  • அ+ அ-

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்பு வெளியிட எந்த தடையும் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. அன்றே காலியாக உள்ள 21-ல் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படு கிறது. இதையொட்டி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:தமிழகத்தில் திருவாரூரில் ரூ.50 லட்சம் உட்பட தற்போது வரை ரூ.57 லட்சத்து 12ஆயிரத்து 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து, ஆவணங்கள் தந்தால் பணம் திருப்பித் தரப்படும். பொது சொத்துகளில் அரசியல் கட்சிகள் விளம்பரம் எழுதுதல், போஸ்டர் மற்றும் பேனர் அமைத்தல் போன்றவை தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், அவை அகற்றப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் 2,653 சுவர் விளம்பரங்கள், 5,237 போஸ்டர், 1561 பேனர்கள், 1924இதர விளம்பரங்கள் என 11,375விளம்பரங்களில், 8,970 விளம் பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தனியார் சுவர்களில் விளம்பரம் தொடர்பாக 3 ஆயிரத்து 88 புகார்கள் வந்துள்ளன. உரிமையாளர்கள் அளித்த புகார்கள் அடிப்படையில் அவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களுக்கான செலவுகள் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும்.

மதுரையில் தேர்தலை தள்ளிவைக்க கோரும் மனு மீதானவிசாரணை 14-ம் தேதி (நாளை)உயர் நீதிமன்றத்தில் வருகிறது. அப்போது, அங்குள்ள நிலைமை, நிகழ்வுகள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்குப்பின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதுதவிர புனித வெள்ளி, ரம்ஜான் மாதம் இவற்றை குறிப்பிட்டு தேர்தலை மாற்றுத் தேதியில் நடத்த வேண்டும் என்பதற்கான மனுக்களும் எனக்கு இ-மெயில் மூலம் வந்துள்ளன.

திருப்பரங்குன்றம் தேர்தலை பொறுத்தவரை, வழக்கு தொடர்ந்து சரவணன் மனுவை திரும்ப பெற்றுவிட்டாலும் நீதி மன்றத்தின் உத்தரவு கிடைக்க வேண்டும் அதன் பின்தான் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:கோவையில் ரூ.2 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறதே?அது போன்று நிறுத்தவில்லை. தகவலும் இல்லை.

சமூக ஊடகங்களில் வரும் தவறான தகவல்கள் குறித்த நடவடிக்கை என்ன?சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்கும். தவறான தகவல் தொடரும்போது, அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது ஆய்வு செய்யும். அந்த பதிவு நீக்கப்பட வேண்டும் என்றால், தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்போம்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்புக்கு தடை உண்டா?அரசியல் கட்சிகள் வங்கிக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவிக்கின்றன. அவை அறிவிப்புகள் மட்டுமே என்பதால் தடை இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close