[X] Close

ரங்கசாமியை ஜெ. விமர்சித்த பழைய பிரச்சார வீடியோ: நாராயணசாமி வெளியிட்டார்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 07:10 am
  • அ+ அ-

ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த ரயிலில் இரண்டரை வயது ஆண் குழந்தையை கடத்த முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது உசேன். இவரது மனைவி பர்கத் (25). இவர்களுக்கு இரண்டரை வயதில் சாலிக் உசேன் என்ற மகன் உள்ளார். சையது உசேன் தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சையது உசேன் குடும்பத்துடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் நெல்லூர் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பர்கத்தின் அருகில் தூங்கி கொண்டிருந்த அவரது குழந்தையை மர்ம நபர் ஒருவர் தூக்கினார். திடீரென கண் விழித்துப் பார்த்த பர்கத் குழந்தையை யாரோ தூக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த மர்ம நபர், குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். பர்கத்தின் சத்தம் கேட்டு விழித்த அவரது உறவினர்கள் அந்த மர்ம நபரைப் பின் தொடர்ந்து விரட்டினர். ஆனால், அந்த நபர் ரயிலுக்குள்ளேயே தலைமறைவானார்.

ரயில், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், மகனைக் கடத்த முயன்ற சம்பவம் குறித்து பர்கத் ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close