[X] Close

மாயமான சிறுமி சடலமாக மீட்பு; பாலியல் தொல்லை கொடுத்து கொலையா? - போலீஸார் விசாரணை


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 12:32 pm
  • அ+ அ-

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர் கள் கூடை, கூடையாக மலர்களை கொண்டுவந்து அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தினர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பூச்சொரிதல் விழா நடை பெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதை யொட்டி கோயிலில் விக்னேஸ்வர பூஜை, புண்யாவாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து கோயில் இணை ஆணையர் (பொ) தென்னரசு, மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் பணியாளர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் திரளான பக்தர்கள் தட்டுகள், கூடைகளில் பூக்களை ஏந்தி யானை புடை சூழ, மேள தாளத்துடன் ஊர்வலமாக வெளிப் பிரகாரத்தில் வலம் வந் தனர்.

பின்னர் காலை 7.30 மணிக்கு மீன லக்னத்தில் காப்பு கட்டப்பட்டு, மாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர், திருச்சி, புதுக் கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில் வைத்து பூக்களை எடுத்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபாடு நடத்தினர்.

விரதம் தொடங்கிய அம்மன்

உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்க ளுக்கு எந்தவிதமான நோய்களும், தீய வினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைப்பதற் காகவும் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை தொடங்கினார். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்களுக்கு மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது.

துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படும். அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுகிழமைகளிலும் பூச் சொரிதல் விழா நடைபெறும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close